காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (29-04-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (29-04-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
- வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும்... சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...
- கொளுத்தும் வெயில் மற்றும் கோடை சீசனை ஒட்டி கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் அலைமோதிய கூட்டம்... கடற்கரைகளில் நீராடி வெயிலின் தாக்கத்தை தணித்துக்கொண்ட பொதுமக்கள்...
- இன்று குடும்பத்தினருடன் கொடைக்கானல் செல்கிறார், முதலமைச்சர் ஸ்டாலின்... முதலமைச்சரின் வருகையை ஒட்டி மே 4ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை...
- நீலகிரி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையில் சிசிடிவி இயங்காததற்கு, வெப்பமே காரணம்... நீலகிரி ஆட்சியர் அருணா விளக்கம்...
- நீலகிரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி கேமராக்கள் இயங்காத விவகாரம்... தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் ஸ்ட்ராங் ரூமை பார்வையிட்ட வேட்பாளர்கள்...
- கோவை மக்களவை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள பகுதியில் டிரோன்கள் பறக்க தடை...ஜூன் 4 ஆம் தேதி வரை 96 மணிநேரத்திற்கு ஒருமுறை தடையை நீட்டிக்க காவல்துறை திட்டம்...
- தீவிரவாதிகளை கொன்றால் காங்கிரசுக்கு கண்ணீர் வருகிறது என பிரதமர் மோடி கடும் விமர்சனம்... கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும், உத்தரகன்னடாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேச்சு...
- பாஜகவும் - பிஜூ ஜனதளமும் சில தொழிலதிபர்களுக்கு நன்மை செய்துவிட்டு, பொதுமக்களுக்கு அநீதி இழைத்து வருகிறது... ஒடிசா மாநிலம் கேந்திரபராவில் நடைபெற்ற தேர்தல் பிராசார பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேச்சு...
- உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தீவிர பிரசாரம்... இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரிப்பு...
- ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று இரண்டு போட்டிகள்... அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில், குஜராத் அணியை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி... சேப்பாக்கத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் ஐதராபாத் அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சி.எஸ்.கே. அபாரம்...
- ஐ.பி.எல். தொடரின் இன்றைய லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை... இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தொடங்கும் போட்டி...
Next Story