நாளையே கடைசி நாள்...தேர்தல் ஆணையம் வைத்த செக்!
- நாளையே கடைசி நாள்
- தேர்தல் ஆணையம் வைத்த செக்!
- தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் நிலையில், மொத்தம் 1,403 பேர் 1,749 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
- நேற்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில், நாளை வரை வேட்பு மனுவை திரும்ப பெற அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.அதன்படி, எந்த ஒரு காரணமும் சொல்லாமல் வேட்பு மனுவை திரும்ப பெறலாம் எனவும்,குறிப்பாக, தேர்தல் நடத்தும் விதியில் உள்ள படிவம் 5ன் படி எழுத்து பூர்வமாக வேட்பு மனுவை திரும்பப் பெற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.வேட்பாளரோ அல்லது முன்மொழிபவரோ அல்லது வேட்பாளரின் தேர்தல் முகவரால் மட்டுமே நேரடியாக வேட்பு மனுவை திரும்பப் பெற முடியும் எனவும் விதிகள் உள்ளன.குறிப்பாக வேட்பு மனுவை அஞ்சல் மூலம் திரும்பப் பெற முடியாது எனவும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவின்படி ஒரு முறை வேட்பு மனுவை திரும்பப் பெற விண்ணப்பித்துவிட்டால், அந்த முடிவை மாற்ற முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story