பலத்த போலீஸ் காவலோடு இறங்கிய ஓட்டு மெஷின்.... நெருங்கும் தேர்தல்.. அதிரும் களம்
நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் உள்ள ஆயிரத்து 491 வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான, ஆயிரத்து 795 வாக்குப்பதிவு இயந்திரங்களும் பிரித்து வைக்கப்பட்டன.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து, முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துவரப்பட்டது.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்குரிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவை, அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டது.
கும்பகோணம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறைக்கு கொண்டுவரப்பட்டது.
Next Story