முதல்வருக்கு கோரிக்கை வைத்த தங்கர் பச்சான்
கடலூர் பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் வடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வடலூர், பார்வதிபுரம், சத்திய ஞான சபை, ஆபத்தானபுரம், சேராக்குப்பம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். கூட்டணி கட்சியினருடன் பிரச்சாரம் மேற்கொண்டபோது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வடலூர் சத்திய ஞான சபை சென்று வள்ளலாரை தரிசனம் செய்த அவர் அணையா அடுப்பு உள்ளிட்டவற்றைப் பார்த்து அங்கு தர்ம சாலையில் உணவு உட்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், வள்ளலார் சர்வதேச மையத்தை, சத்திய ஞான சபையில் அமைக்கக் கூடாது என்பதுதான் அனைவரின் கருத்து என்று கூறினார்...
Next Story