வீதி வீதியாக சென்று வாக்குறுதிகளை அள்ளி வீசிய பொன்.ராதாகிருஷ்ணன்
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளும், பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டனர். வீதி வீதியாக சென்று, பொதுமக்களிடம் வாக்குறுதிகளை கூறிய பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சராக இருந்த போது கொண்டு வந்த திட்டங்களையும் பட்டியலிட்டு வாக்கு சேகரித்தார். பின்னர் பேட்டி அளித்த பொன்.ராதாகிருஷ்ணன், மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனை, விமான நிலையம் உள்ளிட்டவை கொண்டு வருவேன் என்று வாக்குறுதி அளித்தார். குமரி மக்களவைத் தொகுதியில் தன்னை வெற்றி பெறச் செய்தால், டிசம்பர் 25ஆம் தேதிக்குள் நான்கு வழி சாலை பணியை நிறைவு செய்து கொண்டு வருவேன் என்று பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி அளித்தார்.
Next Story