ஈபிஎஸ்ஸை தேடிவந்த பழைய `நண்பர்' - உறுதியான கூட்டணி..!

x

அதிமுக கூட்டணியில் சீட் ஒதுக்குமாறு இந்திய தேசிய லீக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. சென்னை பசுமை வழி சாலை இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் முனீர் ஷெரீப் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் பேசிய அவர், ஜெயலலிதா பொதுச்செயலாளராக பதவி வகித்த போது அதிமுகவுடன் பயணித்ததாகவும், பின்னர் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் உறவு முறிந்ததாகவும் சுட்டிக்காட்டினார். தற்போது பாஜகவுடனான உறவை அதிமுக முறித்ததால் கூட்டணி அமைக்க முடிவு செய்ததாக முனீர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்