வெளியானது கார்த்தி சிதம்பரத்தின் சொத்து பட்டியல்.. மனைவி பேர்லயே இவ்ளோவா? கடனே ரூ.23.50 கோடி
சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தின் சொத்து மதிப்பு 96 கோடி 25 லட்சம் என பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்தி சிதம்பரம் பெயரில் மொத்தம் 30.26 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள், 24.73 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அவரது மனைவி ஸ்ரீநிதி பெயரில் 12.26 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள், 29 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் இருப்பதாக பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கார்த்தி சிதம்பரம் பெயரில் 12 புள்ளி 32 கோடியும், மனைவி ஸ்ரீநிதி பெயரில் 11 புள்ளி 16 கோடி கடன் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது
Next Story