திடீரென வீட்டுக்குள் புகுந்த கும்பல் -ஒரு குடும்பத்தையே சிதைத்த கொடூரம்..கர்நாடகாவைஅதிர வைத்தசம்பவம்

x

கர்நாடகாவின் தாசரஹள்ளி பகுதியை சேர்ந்தவர் பரசுராம ஹதிமானி. இவருக்கு லட்சுமி ஹதிமானி என்பவருடன் திருமணமாகி கார்த்திக் பகாலே என்ற மகனும், அகன்ஷா ஹதிமானி என்ற மகளும் இருந்துள்ளனர். சம்பவத்தன்று இரவில்... வீட்டின் மொட்டை மாடியில் தூங்கி கொண்டிருந்த நால்வரையும் கும்பல் ஒன்று சுவரேறி குதித்து வந்து அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில், நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னனியில் வியாபார போட்டி மற்றும் குடும்ப பிரச்சினை இருப்பதாக கூறப்படும் நிலையில், தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், தப்பியோடிய கொலையாளிகளை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்..


Next Story

மேலும் செய்திகள்