SRH-ன் அதிரடி ஆட்டம் தொடருமா? - டெல்லி கோட்டையில் வெற்றி யாருக்கு?

x

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 35ஆவது லீக் போட்டியில் ரிஷஃப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியும், கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணியும் மோத உள்ளன. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 23 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், டெல்லி அணி 11 போட்டிகளிலும், ஹைதராபாத் அணி 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. நடப்பு ஐபிஎல் சீசனில் ஹைதராபாத் அணி விளையாடிய 6 போட்டிகளில் 4 வெற்றி, இரண்டு தோல்வி என புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்தையும், டெல்லி அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என பட்டியலில் 6ஆம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது..


Next Story

மேலும் செய்திகள்