’இந்தியா கூட்டணிக்கு’ புது பூஸ்ட்... ஒரு வழியாக வெளியான நல்ல செய்தி

x

’இந்தியா கூட்டணிக்கு’ புது பூஸ்ட்... ஒரு வழியாக வெளியான நல்ல செய்தி - பிப். 27-ல் நாட்டுக்கே முக்கிய அறிவிப்பு

உத்தரபிரதேசம் , டெல்லியை தொடர்ந்து பிற மாநிலங்களிலும் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு குறித்து சுமூக தீர்வுகள் ஏற்றப்பட்டு வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அது குறித்து அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.

கடந்த ஆண்டு தேசிய அரசியலில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய எதிர்க்கட்சிகளின் பிரம்மாண்ட 'இந்தியா' கூட்டணி.... நவம்பர் மாதம் நடந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்... நிதிஷ் குமாரின் வெளியேறல்... மம்தா, கெஜ்ரிவாலின் தனித்துப் போட்டி அறிவிப்புகளால் ஆட்டம் கண்டுவந்தது.

இந்த நிலையில்... தற்போது இந்தியா கூட்டணிக்கு

வலு சேர்க்கும் விதமாக தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் அடுத்தடுத்து சுமூக முடிவுகள் எட்டப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில்

17 தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க சமாஜ்வாதி

கட்சி முன் வந்துள்ள நிலையில், மத்திய பிரதேசத்திலும் சமாஜ்வாதிக்கு ஒரு தொகுதியை ஒதுக்க காங்கிரஸ்

முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

டெல்லியில் மொத்தம் உள்ள ஏழு தொகுதிகளில் மூன்று தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க ஆம் ஆத்மி சமதித்ததாகவும், குஜராத், ஹரியானா, அஸ்ஸாம், கோவாவில் இருகட்சிகளுக்கும் இடையே சுமூக உடன்பாடு ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

பீ காரை பொறுத்தவரை, லாலு பிரசாத் யாதவியின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 30 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும், எஞ்சியுள்ள பத்து தொகுதிகளை காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுக்கு ஒதுக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதே போல், உ.பி.க்கு அடுத்து அதிக எம்.பி.க்களை கொண்ட மகாராஷ்டிராவிலும் இந்தியா கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு இறுதி கட்டத்தை எட்டியிருப்பதாக கூறப்படுகிறது.

மொத்தம் 48 இடங்களை கொண்ட மே.வங்கத்தில் காங்கிரஸ் 14 தொகுதிகளிலும், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா 15 தொகுதிகளிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஒன்பது தொகுதிகளிலும் போட்டியிட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மீதமுள்ள தொகுதிகளுக்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

பிப்ரவரி 27ஆம் தேதி தொகுதி பங்கீடு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக...மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டு என மம்தா அறிவித்திருந்த நிலையில், காங்கிரஸ், திரிணாமுல் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்தை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் காங்கிரசுக்கு 2 தொகுதிகளை கொடுக்க திரிணாமுல் முன் வந்திருப்பதாகவும், அதற்கு பதிலாக அசாமிலும், மேகாலயாவிலும் திரிணாமுல் காங்கிரசுக்கு தலா ஒரு தொகுதிகளை ஒதுக்க காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்