தேர்தல் பத்திரம்.. SBI-ஐ நோக்கி பாயும் அடுத்த அஸ்திரம்.. வெளிவருமா இன்னொரு பூதம்..?
#supremecourt #sbi #electoralbonds
2018, மார்ச் 1 முதல், 2019 ஏப்ரல் 11 வரை விற்பனையான 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பொதுநல மனுவில், 2018 மார்ச் தொடங்கி தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளும் உரிமை நாட்டு மக்களுக்கு உண்டு என கூறப்பட்டுள்ளது. 2019, ஏப்ரல் 12-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 15 வரை விற்கப்பட்ட தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட உத்தரவிட்ட நிலையில், அதற்கு முன்பு விற்கப்பட்ட 4 ஆயிரம் கோடி ரூபாய் தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிற்கும் உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story