தேர்தல் விதி மீறல்...நாம் தமிழர் கட்சியினர்...மீது பாய்ந்த வழக்கு
திருப்பத்தூரில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த சில மணி நேரங்களுக்கு பின், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உரிய அனுமதியின்றி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தலைமையில் ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனையடுத்து, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 5 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Next Story