அமலான கட்டுப்பாடுகள்..கோவையில் பிரதமருக்கு விலக்கா? ஆட்சியர் விளக்கம்

x

கோவை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நடத்தை விதிமுறை நடைமுறைக்கு வந்த நிலையில், சேலத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகளை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது... தொடர்ந்து அரசு அலுவலகங்களில் இருக்கக்கூடிய உருவப் படங்களும் மூடப்பட்டன. மாநகரின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சி பேனர்கள் மற்றும் சுவரொட்டிகள் அனைத்தும் கிழிக்கப்பட்டன. இந்த நடைமுறை வரும் ஜூன் 4ம் தேதி வரை அமலில் இருக்கும் என தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆட்சியர் மகாபாரதி பறக்கும் படையினர் சோதனை மேற்கொள்வதை நேரில் கள ஆய்வு செய்தார்... ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 3 நிலையான கண்காணிப்புக் குழு மற்றும் 3 பறக்கும் படையின் ஜிபிஎஸ் கேமரா பொருத்தப்பட்ட வாகனங்களுடன் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவின் சோதனை பணிகளை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான மகாபாரதி கொடி அசைத்து துவக்கி வைத்தார்... தொடர்ந்து மன்னம்பந்தல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி முன்பு தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்ததை நேரடியாகக் கள ஆய்வு செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்