"சமூக வலைதளங்களில் ஓட்டு சேகரித்தால் 2 ஆண்டு சிறை" - தேர்தல் ஆணையம் விடுத்த எச்சரிக்கை

x

பிரசாரம் ஓய்ந்த பிறகு சமூக வலைதளங்களில் ஓட்டு சேகரித்தால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. முதற்கட்ட மக்களவை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. அதன் பிறகு வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்று மாலை 6 மணிக்கு பிறகு, தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலத்தை நடத்தக் கூடாது, எஃப்.எம். ரேடியோ, வாட்ஸ்-அப், முகநூல், டிவிட்டர் என, எந்த விதமான வடிவ பிரச்சாரங்களும் அனுமதிக்கப்பட மாட்டாது என தமிழக தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாகு தெரிவித்துள்ளார். மீறினால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126 (2)-ன்படி, 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கூறிய அவர், வெளியாட்கள் தொகுதியைவிட்டு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட வாகன அனுமதி இன்று மாலை 6 மணி முதல் செயல்திறன் அற்றதாகிவிடும் என்றும் சத்ய பிரதா சாகு கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்