"மதிமுக விசிக சின்னம்" - தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்
மதிமுக, விசிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு, அதிகாரபூர்வமாக, தேர்தல் ஆணையத்தால் இன்னும் சின்னம் ஒதுக்கபடவில்லை என்று, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு புதிய வாக்காளர்கள் எப்படி வாக்களிக்க வேண்டுமென்ற விளக்க விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு தகவல் அளித்த அவர், தமிழ்நாட்டில் 453 நட்சத்திர பேச்சாளர்களுக்கு பிரச்சார அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். மதிமுக, விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு தொடர்பான இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து அறிவிப்பு வரவில்லை என்றும் தெரிவித்தார். சிவிஜில் செயலி மூலம் இதுவரை 11 ஆயிரத்து 305 புகார்கள் பெறப்பட்டுள்ளதோடு, வாக்காளர்களிடம் இருந்து 17 ஆயிரத்து 800 புகார்கள் கட்டுப்பாட்டு அறைக்கு வந்துள்ளதாகவும் சாகு கூறினார்.