தேர்தல் பணி - நிதி ஒதுக்கிய தமிழக அரசு | elections 2024 | Tn Govt
#elections2024 | #TnGovt
தேர்தல் பணி - நிதி ஒதுக்கிய தமிழக அரசு
தமிழகத்தில், தேர்தல் நாளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக முதல்கட்டமாக 58 கோடியே 58 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலும் வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழகத்தில் 68 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் தலா 6 ஊழியர்கள் பணியில் இருக்கும் நிலையில், அவர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக முதல்கட்டமாக 58 கோடியே 58 லட்சம் ரூபாய் நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. ஓட்டுச்சாவடி தலைமை அலுவலருக்கு தலா ஆயிரத்து 700 ரூபாயும், கடை நிலை ஊழியர்களுக்கு தலா 600 ரூபாய் வரையிலும் ஊதியம் வழங்கப்படுகிறது. மேலும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் காவல்துறை, வனத்துறை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல்படை, சிறைத்துறை, மத்திய ஆயுதப்படை போலீசார், மாநில ஆயுதப்படை போலீசார் ஆகியோருக்கு அவர்களின் நிலைகளுக்கு ஏற்ப 150 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை ஊதியம் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.