மோடிக்கு நேரடியாக சவால் விட்ட உதயநிதி.."செய்வேன்.." என சொன்ன அண்ணாமலை..

x

அடுத்த 40 நாட்கள் இங்கேயே தங்கி பிரசாரம் செய்தாலும் தமிழ்நாட்டில் ஒரு தொகுதியிலாவது பா.ஜ.க.வை ஜெயிக்க வைக்க முடியுமா? என பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.பாராளுமன்றத் தேர்தலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்து அவர் தெரிவித்த விளக்கத்தைக் கேட்கலாம்...அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகள் குறித்து 10 நாட்களில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.திமுகவுடன் தொகுதி உடன்பாடு சுமுகமாக நடைபெற்று வருவதாகவும், வெகு விரைவில் உடன்பாடு எட்டப்படும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தந்தி டிவிக்கு பேட்டியளித்துள்ளார்.திமுகவுடனான தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தையின்போது கூடுதல் தொகுதிகளை கேட்பதில் தவறில்லை என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.கூட்டணி குறித்து சில கட்சிகளுடன் பேசிக்கொண்டுள்ளதாகவும் இறுதி வடிவம் எட்டிய பிறகு அறிவிப்போம் என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுக தனிச்சின்னத்தில் போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு முதல்வர் ஸ்டாலின் நாளை அழைத்துள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்