பணப்பட்டுவாடா.. கையும் களவுமாக சிக்கிய 2 பேர்? - விசயம் தெரிந்து கொந்தளித்த அதிமுக
#kumbakonam | #loksabhaelection2024
பணப்பட்டுவாடா.. கையும் களவுமாக சிக்கிய 2 பேர்? - விசயம் தெரிந்து கொந்தளித்த அதிமுக
கும்பகோணம் காவல் நிலையத்தில் போலீசாருடன் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. நாளை தேர்தல் நடைபெறும் நிலையில், நாகேஸ்வரன் கோவில் பகுதியில், பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக இருவரை பிடித்து பறக்கும் படையினர் போலீசில் ஒப்படைத்தனர். இதனை அறிந்த அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்பியுமான பாரதிமோகன், கட்சி நிர்வாகிகளுடன் காவல் நிலையத்திற்கு சென்ற போது, போலீசார் தடுத்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும்
என போலீசார் கூறியதை அடுத்து அதிமுகவினர் கலைந்து சென்றனர்.
Next Story