அறிமுக கூட்டம் அடிதடி கூட்டமாக மாறிய சம்பவம் - சேர்களை வீசி பயங்கர சண்டை..! மாறி மாறி அடித்து கொண்ட கட்சியினர்

x

திட்டக்குடி அடுத்த கீழ்செருவாயில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் சி.வி.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில், கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் மேடையில் ஏறி அமர முயன்றனர். இதனால், கூட்டணி கட்சி மாவட்ட செயலாளர்கள் மட்டுமே மேடையில் அமர வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் யார் மேடையில் அமர்வது என்பது தொடர்பாக, முன்னாள் மாவட்ட செயலாளர் திலீப் குமார் மற்றும் தற்போதைய மாவட்ட செயலாளர் திராவிடமணி தரப்பினர் இடையே வாகுவாதம் ஏற்பட்டு கை கலப்பாக மாறியது. இதையடுத்து போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பிறகு கூட்டம் முடிந்து அனைத்து தலைவர்களும் புறப்பட்டு சென்ற நிலையில், மீண்டும் நாற்காலிகளை வீசி தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது


Next Story

மேலும் செய்திகள்