"மத்திய அரசின் பணத்தில்தான் மகளிர் உரிமைத்தொகை" - புயலை கிளப்பும் அண்ணாமலை
மகளிர் உரிமைத் தொகையை பாஜக அதிகரிக்கத்தான் செய்யும் என தமிழக பாஜக தலைவரும் கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை கூறியுள்ளார். கவுண்டம்பாளையம் பகுதிக்கான பாஜக ஊழியர் கூட்டம் சரவணம்பட்டியில் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, மத்திய அரசின் பணத்தில்தான் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவதாகக் கூறினார்.
Next Story