நீக்கப்பட்ட ஒற்றை சீட் - நாளை டெல்லி பறக்கும் `ஹாட்' ஃபைல்
மக்களவைத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது குறித்து அந்தந்த தொகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகள், முக்கிய தலைவர்களிடம் தமிழக பா.ஜ.க கருத்து கேட்கிறது. தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி அலுவலகத்தில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நாடாளுமன்ற வேட்பாளர் குறித்து கருத்து கேட்டார். நிர்வாகிகளிடம் கருத்து கேட்பதற்காக, மாநில அளவில் 2 முக்கிய தலைவர்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் செல்கின்றனர். வேட்பாளராக நிற்க விருப்பம் உள்ளவர்கள் கூட இந்த குழுவை சந்தித்து தங்களது விருப்பத்தை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.இதன் பின்னர் பா.ஜ.க மாநில தேர்தல் குழுவிலும் கூட்டம் நடத்தப்படுகிறது. அந்த கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு, உத்தேச பட்டியல் நாளை டெல்லி தலைமைக்கு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும், மூன்று வேட்பாளர்களை கட்சியினர் பரிந்துரை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பெயர், கட்சியில் இருக்கும் பொறுப்புகளை அதற்கான படிவத்தில் பூர்த்தி செய்து வழங்குகின்றனர்.