அண்ணாமலை பிரசாரம் முடிந்து சென்றவுடன் நடந்த சம்பவம் - அதிர்ச்சியில் பாஜக நிர்வாகி
அண்ணாமலை பிரசாரம் முடிந்து சென்றவுடன் நடந்த சம்பவம் - அதிர்ச்சியில் பாஜக நிர்வாகி
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி கட்சிக் கொடி மற்றும் பேனர்களை வைத்த பாஜக நிர்வாகி மீது திருவான்மியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை வரவேற்று மூன்று பேனர்கள் 50க்கும் மேற்பட்ட கட்சி கொடி கம்பங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், பாஜக தென் சென்னை கிழக்கு மாவட்ட துணை தலைவர் குமரன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோல் திமுக கட்சி கொடி கம்பங்கள் அனுமதி இன்றி நடப்பட்டுள்ளதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அடையாளம் தெரியாத நபர் மீது திருவான்மியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.