"ஆந்திர பிரதேசத்தில் 144 தடை உத்தரவு.." விழி பிதுங்கும் தேர்தல் களம் | Andhra | Thanthitv
ஆந்திர பிரதேசத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், நரசராவ் பேட்டையில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, குண்டூர் எம்எல்ஏ கோபிரெட்டி ஸ்ரீநிவாஸ் வீட்டின் மீது தெலுங்கு தேசம் கட்சியினர் கற்கள், கட்டைகளை வீசித் தாக்குதல் நடத்தினர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தபோது, ஓடுவதுபோல் போக்கு காட்டி விட்டு, மீண்டும் வந்து கல்வீச்சில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களை ரப்பர் குண்டுகளால் துப்பாக்கிச் சூடு நடத்தி, போலீசார் விரட்டியடித்தனர். மேலும், கலவரம் ஏற்படாமல் தடுக்க அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Next Story