நெருங்கியது கிளைமேக்ஸ்.. கத்தையா கேட்ட பிரேமலதா.. ஒத்தையா கொடுக்கும் ஈபிஎஸ்?
அதிமுக - தேமுதிக இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது....
அதன்படி, நேற்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில், பிரேமலதா விஜயகாந்தை அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேமுதிக சார்பில் 10 தொகுதிகள் கேட்கப்பட்ட நிலையில், 5 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, தேமுதிக விரும்பும் மதுரை, விருதுநகர் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட தொகுதிகளை அதிமுக ஒதுக்க மறுப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக மட்டுமின்றி பாஜகவும் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன...
Next Story