பாஜகவுக்கு ஜெயக்குமார் மகன் சொல்லும் எளிய கணக்கு

x

#annamalai #bjp #jayavardhan

தென் சென்னை தொகுதியில் பிரதமர் மோடியின் பரப்புரை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று, தென்சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் தெரிவித்துள்ளார். தென் சென்னை தொகுதிக்குட்பட்ட ஆர்.ஏ.புரம் கோவிந்தசாமி நகர் குடியிருப்பு பகுதியில் இன்று ஜெயவர்தன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். ஜெயவர்தனுக்கு அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்தும் தேங்காய் உடைத்தும் மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெள்ள நிவாரண நிதியை தமிழகத்துக்கு பெற திமுக எம்.பி.க்கள் என்ன செய்தனர் என்று கேள்வி எழுப்பினார்..


Next Story

மேலும் செய்திகள்