நடுவானில் நடந்தது என்ன? 239 உயிர்கள் எங்கே? உலகையே உலுக்கிய மர்மம் | Malaysia Airlines | World News

x

மலேசிய விமானம் மாயமாகி இன்றுடன் 11 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அதில் பயணித்தவர்களின் நிலை தெரியாமல் உறவினர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

மலேசிய ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான MH370 என்ற விமானம், கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி, 239 பயணிகளுடன் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சீனாவின் பெய்ஜிங்கை நோக்கி பறந்து சென்றது. ஆனால், நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானம், திடீரென தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், மாயமான விமானத்தை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. ஆனால், கண்டுபிடிக்க முடியாத‌தால், கடலில் விழுந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 10 ஆண்டுகள் கடந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம், விமானத்தை தேடுவதற்கு மலேசிய அரசு ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்கீடு செய்த‌து. இந்நிலையில், இன்றுடன் 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பயணிகளின் நிலை என்னவென்று தெரியாமலும், அவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்காமலும் உறவினர்கள் காத்துக் கிடக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்