உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் கோனேரு ஹம்பி
2024 உலக ரேபிட் செஸ் சாம்பியஷிப் பட்டத்தை இந்தியாவின் கோனேரு ஹம்பி Koneru Humpy இரண்டாவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற உலக ரேபிட் செஸ் சாம்பியஷிப் போட்டியின், மகளிர் பிரிவின் 11-வது சுற்றில், இந்தோனேசியாவின் ஐரின் சுகந்தரை Irine Sukandar கோனேரு ஹம்பி வீழ்த்தினார். இதன்மூலம், 8.5 புள்ளிகள் பெற்ற கோனேரு ஹம்பி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். முன்னதாக, 2019-ல் மாஸ்கோவில் நடைபெற்ற ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பை ஹம்பி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story