3வது முறையாக அதிபராக பதவி ஏற்பு.. தலைக்கு விலையை அறிவித்த அமெரிக்கா
வெனிசுலா அதிபராக நிக்கோலஸ் மதுரா 3வது முறையாக பதவி ஏற்றுக் கொண்டார். அந்நாட்டின் தலைநகர் கராகஸில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதை தொடர்ந்து வழங்கப்பட்ட ராணுவ மரியாதையையும் நிக்கோலஸ் ஏற்றுக் கொண்டார். வருகிற வருகிற 2031 ஆம் ஆண்டு வரை நிக்கோலஸின் பொதுவுடமைவாத பிஎஸ்யுவி கட்சி ஆட்சியில் இருக்கும் என தெரிகிறது. இதனிடையே, வெனிசுலா நாட்டைச் சேர்ந்த 8 அதிகாரிகள் மீது பொருளாதார தடை விதித்துள்ள அமெரிக்க அதிபர் பைடன் தலைமையிலான அரசு, மதுராவை கைது செய்வதற்கான சன்மானத்தையும் 25 மில்லியனாக உயர்த்தி அறிவித்துள்ளது.
Next Story