ஐ.நா அமைதிப்படை மீது அதிரடி தாக்குதல் - "சும்மா விடமாட்டேன்.." - அதிபர் ஆவேசம்
லெபனானில் ஐ.நா அமைதிப்படை மீது தாக்குதல் நடத்தியவர்களை சும்மா விடமாட்டேன் என்று இடைக்கால அதிபர் ஜோசப் ஆவோன் (Joseph Aoun) சபதமேற்றுள்ளார். பெய்ரூட் விமான நிலையம் நோக்கி சென்ற ஐ.நா அமைதிப்படை வாகனங்கள் மீது ஹிஸ்புல்லா அமைப்பின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். மேலும், அவர்களது வாகனங்களையும் தீ வைத்து எரித்தனர். இந்த தாக்குதலில், அமைதிப்படையில் இருந்த பலர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு, கண்டனம் தெரிவித்துள்ள லெபனானின் இடைக்கால அதிபர் ஜோசப் ஆவோன் (Joseph Aoun) தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். இதே போன்று, ஐ.நா அமைப்பின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரசும் (antonio guterres) கண்டம் தெரிவித்துள்ளார்.
Next Story