உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் - 13 பேர் பலி | Ukraine | Russia | War | Thanthi TV
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர், ஆயிரத்து 50வது நாளாக நீடிக்கிறது. போரை நிறுத்துவதற்கான முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், இருநாடுகளும் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், உக்ரைனின் ஸபோரிஜ்ஜியா (Zaporizhzhia) மாகாணத்தில், ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
Next Story