ட்ரம்ப் போட்ட மாஸ்டர் பிளான் - முடிவுக்கு வருகிறதா உலகமே உற்றுநோக்கும் நேரம்?

x

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து புதின் மற்றும் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். புளோரிடாவின் பாம் பீச்சில் உள்ள தனது ரிசார்ட்டில் செய்தியாளர்களை சந்தித்த டொனால்ட் ட்ரம்ப், உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் நிறுத்தப்பட வேண்டும் என்றார். போரை முடிவுக்கு வர, உக்ரைன் தமது நிலப்பகுதியை ரஷ்யாவுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என ட்ரம்ப் கருதுகிறாரா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நேரடியாக பதிலளிக்காத ட்ரம்ப், சர்ச்சைக்குள்ளான பகுதிகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகவும், அதிலிருந்து மீண்டு பழைய நிலைக்கு வர ஒரு நூற்றாண்டு ஆகும் என்றும் ட்ரம்ப் கூறினார். 1861 முதல், 1865 வரையிலான அமெரிக்க உள்நாட்டு போரின் சில கொடூரமான புகைப்படங்களை போன்று, உக்ரைன் - ரஷ்ய போர் தொடர்பான புகைப்படங்கள் தமக்கு காட்டப்பட்டதாக ட்ரம்ப் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்