வெறியாட்டம் ஆடிய ரஷ்யா... 80 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் படுகொலை - உலகம் கண்டிரா பேரழிவு
போர் துவங்கியது முதல் இன்றுவரை 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.. இதில் மரணங்கள் மற்றும் காயமடைந்தோர்களின் எண்ணிக்கை அடக்கம்... உக்ரைனிய நகரங்களும் கிராமங்களும் பேரழிவை சந்தித்துள்ளன. தரவுகளின்படி 80 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 4 லட்சம் வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய உளவுத்துறை இறந்த வீரர்கள் எண்ணிக்கை 2 லட்சம் என கூறுகிறது... ஆகஸ்ட் 31 நிலவரப்படி பொதுமக்களில் 11 ஆயிரத்து 743 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 24 ஆயிரத்து 614 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கிட்டத்தட்ட 600 உக்ரைனிய குழந்தைகளும் போரில் மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யாவும் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. போர் தீவிரமான காலகட்டங்களில் நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனுக்குள்ளேயே 40 லட்சத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ள நிலையில் 60 லட்சத்திற்கும் அதிகமானோர் வெளிநாடுகளுக்குத் தப்பியுள்ளனர். யுத்தம் தொடங்குவதற்கு முன் உக்ரைனில் இருந்த பிறப்பு விகிதம் மூன்றில் ஒரு பங்காக குறைந்துள்ளது. ரஷ்யா இப்போது உக்ரைனின் 5ல் 1 பகுதியை ஆக்கிரமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போரால் உக்ரைன் பொருளாதாரமும் பலத்த சேதமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.