கோமாவிற்கு சென்ற தாய்...'விற்று'விட்டு ஓடிய தந்தை - டிக்டாக் நிகழ்த்திய மாயாஜாலம்
எமி க்விட்டியா மற்றும் அனோ சர்டானியா இருவரும் இரட்டையர்கள்... 2002ல் இவர்கள் பிறந்ததும் தாய் கோமாவிற்கு சென்று விட்டார்... தந்தை இருவரையும் வெவ்வேறு குடும்பங்களுக்கு விற்று விட்டார்... அனோ திபிலிசியிலும் எமி ஜுக்டிடியிலும் வளர்ந்துள்ளனர்... இரு நகரங்களுக்கும் இடையே 200 மைல் தொலைவு வித்தியாசம்... இருவருக்கும் 12 வயது நிரம்பையில் தொலைக்காட்சியில் நடந்த நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற அனோ தன்னைப் போலவே இருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார்... ஆனால் அவர் தன் உடன் பிறந்த சகோதரி என்பதை அவர் அப்போது அறிந்திருக்கவில்லை... அதே சமயம் டிக் டாக்கில் அனோ தன்னைப் போலவே உருவ ஒற்றுமை கொண்ட எமியைக் கண்டு திகைத்துப் போனார்... அதன்பறகு தான் இருவரும் உடன் பிறந்த இரட்டை சகோதரிகள் என்பது தெரிய வந்தது... இச்சம்பவம் இணையவாசிகளை ஆச்சரியம் அடையச் செய்துள்ளது...
Next Story