சொகுசு விடுதியில் பயங்கர தீ விபத்து... 76 பேர் துடிதுடித்து பலி - அதிர்ச்சி காட்சிகள்

x

துருக்கி நாட்டில், சொகுசு விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. அந்நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள போலு மாகாணத்தின் கர்தல்காயா பகுதியில் 12 தளங்களை கொண்ட சொகுசு விடுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை பெரும் போராட்டத்திற்கு பின் அணைத்தனர். எனினும், இந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி 76 பேர் உயிரிழந்தனர். பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் பலர், அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்