"டிரம்ப்ப மீறி என்னால எதுவும் பண்ண முடியல" - தாங்க முடியாமல் தேம்பி தேம்பி அழுத பிரபல நடிகை..
டிரம்பின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட குடிபெயர்ந்தோர் தன்னை மன்னித்துவிடுமாறு, அமெரிக்க நடிகை கண்ணீர் வடித்துள்ளார். நடிகையும் பாப் பாடகியுமான செலினா கோமேஸ், தனது இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், டிரம்பின் உத்தரவுகளால், மெக்சிகோவில் இருந்து குடிபெயர்ந்து வந்தோர் பாதிக்கப்படுவதற்கு மன்னிப்பு கேட்டு கண்ணீர் வடித்துள்ளார். தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்றும் அதில் கூறியுள்ளார். ஆனால், அந்த வீடியோவை செலினா கோமஸ் நீக்கியுள்ளார். அதே நேரத்தில், அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருவதால் டிரெண்டிங்கில் உள்ளது.
Next Story