டிரம்ப் Vs கமலா ஹாரிஸ்... அமெரிக்காவே பரபரப்பில் இருக்கும் நேரத்தில் பைடன் கூலாக சொன்ன விஷயம்
டொனால்ட் ட்ரம்புடன் விவாதம் செய்ய உள்ள கமலா ஹாரில் பதற்றமின்றியும், அமைதியாகவும் இருப்பதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் ட்ரம்பும், தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிசும் இன்று நேருக்கு நேர் விவாதம் நடத்த உள்ளனர். இதுகுறித்து வாஷிங்டனில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அதிபர் ஜோ பைடன், கமலா ஹாரிஸ் பதற்றமின்றியும், அமைதியாகவும் இருப்பதாக தெரிவித்தார். தமது பேத்தியின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க நியுயார்க் செல்வதாக குறிப்பிட்ட அவர், கமலா ஹாரிசின் விவாதத்தை பார்ப்பேன் என்றார். மேலும், விவாதத்தில் பங்கேற்கும் கமலாவுக்கு சில அறிவுரைகளை கூறியதாகவும், அதனை வெளியிட முடியாது என்றும் பைடன் தெரிவித்தார்.
Next Story