பதவியேற்கும் முன்னே ட்ரம்ப் அறிவிப்பு.. இந்தியாவிற்கு சவால் - மாறும் 5 விஷயம்.. தொற்றிய பதற்றம்

x

அமெரிக்காவே முதன்மை என்ற கொள்கையை கொண்ட டொனால்டு டிரம்பின் வெற்றியால் இந்திய விவகாரங்களில் ஏற்பட போகும் தாக்கங்கள் என்ன...? என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு....

அமெரிக்காவில் இருக்கும் பைடன் அரசுடன் அனைத்து நிலைகளையிலும் நல்ல நட்புறவையே கொண்டிருக்கிறது இந்தியா.

இப்போது அமெரிக்காவே முதன்மை அதாவது வேலைவாய்ப்பு, தயாரிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் அமெரிக்க, அமெரிக்கர்கள் நலனுக்கே முன்னுரிமை என்ற தனது வெளியுறவுக் கொள்கையை மறுசீரமைக்க போவதாக தெரிவிக்கிறார் டிரம்ப்.

டிரம்ப் - பிரதமர் மோடி இடையிலான நட்புறவு "ஹௌடி, மோடி" மற்றும் "நமஸ்தே டிரம்ப்" நிகழ்வுகளில் எல்லோரும் அறிந்த ஒன்றே... அமெரிக்காவை பொறுத்தவரையில் பிராந்தியத்தில் இந்தியா ஒரு முக்கிய strategic கூட்டாளி.

இப்போது டிரம்ப் அதிபராக வருவது, வர்த்தகம், குடியேற்றம், ராணுவ ஒத்துழைப்பு, ராஜ்ய உறவுகளில் பல முக்கிய வாய்ப்புகளையும் மற்றும் சவால்களையுமே கொண்டிருக்கிறது.

ஏற்கனவே டிரம்ப் அதிபராக இருந்த போது பாரிஸ் காலநிலை உடன்படிக்கை மற்றும் ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட முக்கிய சர்வதேச ஒப்பந்தங்களிலிருந்து வெளியேறியது அமெரிக்கா.

இப்போது அவரது 2.0 ஆட்சியிலும் இத்தகைய கொள்கைகள் இந்தியா உட்பட பாரம்பரிய அமெரிக்க கூட்டணிகள் மற்றும் ஒப்பந்தங்களை சீர்குலைக்கலாம்.

இந்தியாவிலிருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கும் வரியை உயர்த்துவேன் என்று ஏற்கனவே டிரம்ப் தனது வாயால் ஒப்பனாக சொல்லிவிட்டார். அப்படி டிரம்ப் நடவடிக்கை எடுத்தால் அமெரிக்க சந்தையை மையமாக கொண்ட இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம், மருந்து மற்றும் ஜவுளித்துறையில் விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.

அதே நேரம், வர்த்தகத்தில் சீனாவிலிருந்து விலக துடிக்கும் டிரம்பின் முயற்சி, இந்தியா தன்னை ஒரு உற்பத்தி மையமாக நிலைநிறுத்திக் கொள்ள வழியையும் ஏற்படுத்தும்.


Next Story

மேலும் செய்திகள்