ரஷ்யாவுடன் திடீர் நெருக்கம் காட்டும் அமெரிக்கா - சீனாவுக்கு வேர்த்த மூக்கு.. சரிக்கட்டிய புதின்
உக்ரைனில் அமைதியை கொண்டு வருவது தொடர்பாக அமெரிக்காவுடன் நடைபெறும் பேச்சுவார்த்தை குறித்து சீனா அதிபருக்கு ரஷ்ய அதிபர் விளக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவுடனான சுமூக உறவை அமெரிக்கா விரும்புவது குறித்து உலக அரசியலில் பெரும் விவாதம் எழுந்துள்ள நிலையில், நெருங்கிய நட்பு பாராட்டும் சீனா அதிபரும் ரஷ்ய அதிபரும் தொலைபேசியில் பேசியுள்ளனர். உக்ரைன் ரஷ்ய போரின் மூன்றாவது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, இந்த உரையாடல் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story