டிரம்ப்பால் மனம் மாறிய புதின்.. முடிவுக்கு வரும் போர்?
உக்ரைன் உடனான மோதலில் சமரச பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் மோதல் தீவிரமாகியுள்ள நிலையில், போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். தேர்தலுக்கு முன்பே தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு உக்ரைன், ரஷியாவுடன் பேச்சுவார்த்தை இருப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில், உக்ரைன் விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ளத் தயாராக இருப்பதாக புதின் அறிவித்துள்ளார். இதற்காக டிரம்பிடம் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும், உக்ரைனிடம் பேச்சுவார்த்தைக்கு எந்த நிபந்தனையும் தாம் விதிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், சிரியா விவகாரத்தில் 9 ஆண்டுகளாக மேற்கொண்டு வந்த முயற்சிகள் தோல்வி அடையவில்லை என்றும் அவர் கூறினார்.