டிரம்பின் அதிர்ச்சி அறிவிப்பு.. மீண்டும் இஸ்ரேல்-காசா போர்? - வந்த வழியிலே திரும்பிய எகிப்து

x

போர் நிறுத்தத்தை ரத்து செய்ய பரிந்துரைப்பேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதை தொடர்ந்து, உதவி பொருட்களை ஏற்றிச்சென்ற டிரக்குகள் மீண்டும் எகிப்து எல்லைக்கு திரும்பின. போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியதாக கூறிய ஹமாஸ் அமைப்பினர், பிணைக்கைதிகளை விடுவிப்பதை நிறுத்துவதாக அறிவித்தனர். இதனையடுத்து, வரும் 15-ம் தேதிக்குள் அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிக்காவிட்டால், ஹமாஸ் - இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்தத்தை ரத்து செய்ய பரிந்துரைப்பேன் என டிரம்ப் தெரிவித்தார். இதனால், காசா செல்ல இருந்த டிரக்குகள் ராஃபா எல்லையிலிருந்து திரும்பின.


Next Story

மேலும் செய்திகள்