ஒற்றை கையெழுத்தில் இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப்? தலையெழுத்தே மாறும் முடிவு
அமெரிக்காவில் பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்குவதை முடிவுக்கு கொண்டுவரும் உத்தரவில் கையெழுத்து போட்டுள்ளார் டிரம்ப்...
அமெரிக்காவில் பிறக்கும் குழந்தையின் பெற்றோரில் யாரேனும் ஒருவர் நிரந்தர அமெரிக்க குடியுரிமை கொண்டிருந்தால் மட்டுமே அந்த குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படும்; சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளர் அதாவது கிரீன் கார்டு வைத்திருப்பவர் குழந்தைக்கு மட்டுமே குடியுரிமை என உத்தரவு சொல்கிறது.
இது அமெரிக்காவில் குடியேறும் இந்தியர்கள் நலனை வெகுவாக பாதிக்கும் என்றே பார்க்கப்படுகிறது.
2024 நிலவரப்படி அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் எண்ணிக்கை 54 லட்சம் ஆகும். அதாவது அமெரிக்க மக்கள் தொகையில் இந்திய அமெரிக்கர்கள் எண்ணிக்கை 1.47% . இவர்களில் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கு, அதாவது 34% பேர் அமெரிக்காவில் பிறந்தவர்கள்.
இப்போது டிரம்ப் உத்தரவு கொள்கையாக மாறினால் அமெரிக்காவில் எச்-1பி விசா போன்ற தற்காலிக வேலை விசாவில் வசிக்கும் இந்தியர்கள், கிரீன் கார்டுக்காக காத்திருக்கும் இந்தியர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் இனி தானாகவே அமெரிக்க குடியுரிமையை பெற முடியாது.
அமெரிக்காவில் படிப்பதற்கான விசாவில் செல்லும் இந்திய மாணவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அமெரிக்க குடியுரிமையை பெறுவதில் சவால்களை எதிர்கொள்ள நேரிடும். பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமையை பெறாவிட்டால் 21 வயதுக்கு பிறகு, இளைஞர் தனது பெற்றோரை அமெரிக்காவுக்கு அழைத்துவர முடியாது.
இந்த நடவடிக்கை அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களுக்கு பிறக்கும் நூறாயிரக்கணக்கான குழந்தைகளை பாதிக்கவே செய்யும்.
ஆம் அமெரிக்க அரசியலமைப்பை திருத்தம் செய்ய நாடாளுமன்ற பிரதிநிதிகள் மற்றும் செனட் சபையில் மூன்றில் 2 பங்கு ஆதரவை பெற வேண்டும்.
இப்போது செனட் சபையில் டிரம்பின் குடியரசு கட்சிக்கு 53 உறுப்பினர்கள் உள்ளனர். பைடனின் ஜனநாயக கட்சிக்கு 47 உறுப்பினர்கள் உள்ளனர்.
அதேவேளையில் பிரதிநிதிகள் சபையில் டிரம்ப் கட்சிக்கு 220 உறுப்பினர்களும், பைடன் கட்சிக்கு 215 உறுப்பினர்களும் உள்ளனர். 1898 ஆம் ஆண்டே அமெரிக்காவில் பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்கும் சட்டத்தை அந்நாட்டு உச்சநீதிமன்றம் உறுதி செய்துவிட்டது.
இந்த சூழலில் டிரம்ப் உத்தரவால் எதையும் மாற்றிவிட முடியாது, சட்டரீதியான சவால்கள் அதிகமாக இருக்கும் என அந்நாட்டு சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். இவ்விவகாரத்தில் டிரம்பின் அடுத்த நகர்வு என்ன...? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.