அதிபர் தேர்தல்.. இக்கட்டான நிலையில் ட்ரம்ப்
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரி வழக்கில் தோல்வியடைந்தால் 835 கோடி ரூபாய்க்கு மேல் வரி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்... ட்ரம்ப் தனது வானளாவிய சிகாகோ கட்டடத்திற்காக வரிச்சலுகைகளைப் பெற சூழ்ச்சி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது... ட்ரம்ப்பின் மகனும், டிரம்ப் அமைப்பின் நிர்வாக துணைத் தலைவருமான எரிக் ட்ரம்ப், அமெரிக்க உள்நாட்டு வருவாய் சேவை அமைப்பின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்... இந்த விவகாரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே தீர்வு காணப்பட்டு விட்டதாகவும், தனது தந்தை அதிபர் தேர்தலில் போட்டியிடுவதால் மீண்டும் தூசி தட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Next Story