துருக்கியில் வெடித்த மக்கள் போராட்டம் - பரபரப்பு காட்சி

x

துருக்கியில், இஸ்தான்புல் Istanbul மேயர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லாயிரக்கணக்கான மக்கள் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் இஸ்தான்புல் மேயரும், முக்கிய எதிர்க்கட்சித் தலைவருமான எக்ரீம் இமாமோக்லு Ekrem Imamoglu கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து போராட்டங்கள் வலுத்துள்ளன.

இஸ்மிர் Izmir உள்ளிட்ட இடங்களில் தடையை மீறி நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது. இதையடுத்து, போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்