2024ஆம் ஆண்டுக்கான முதல் சூரிய கிரகணம்...இருள் சூழ்ந்து இரவாக மாறிய காட்சி

x

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நேர்கோட்டில் நிலா வரும் நிகழ்வை சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான முதல் சூரிய கிரகணம், இந்திய நேரப்படி, இரவு 9.12 மணிக்கு தொடங்கியது. அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் கிரகணம் தென்பட்டது. மெக்சிகோவில் காலை 11.07 மணிக்கு தொடங்கிய சூரிய கிரகணம், நண்பகல் 12.10 மணிக்கு முழு கிரகணமாக காணப்பட்டது. மெக்சிகோவில் மசட்லான், டெர்ரியான் உள்ளிட்ட நகரங்களில் முழு சூரிய கிரகணம் தென்பட்டது. இதே போன்று அமெரிக்காவில் டெக்சாஸ், மிசொரி, இண்டியானா உள்ளிட்ட மாகாணங்களில் சூரிய கிரகண நிகழ்வு காண முடிந்த‌து. முழு சூரிய கிரகணம் நிகழ்ந்த இடங்களில் இருள் சூழ்ந்து இரவு போன்று மாறியது. இந்த சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்ப்பது ஆபத்தானது என்பதால், அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் உள்ள மக்கள் புற ஊதா கதிர்களை தடுக்கும் கண்ணாடிகள் மூலம் பார்த்தனர். அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையின் பால்கனியில் இருந்து சூரிய கிரகண நிகழ்வை பார்த்தார்.


Next Story

மேலும் செய்திகள்