அடுத்தடுத்து 6 முறை... உலுக்கிய நிலநடுக்கம் - 1000 வீடுகள் தரைமட்டம் - சீன அதிபர் அவசர உத்தரவு

x

திபெத்தின் ஷிகாட்சே Shigatse பிராந்தியத்தின் ஜிசாங்கில் Xizang 7.1 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 6 முறை நில அதிர்வு ஏற்பட்ட நிலையில், இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 95 பேர் பலியானதாகவும், 130 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களிலும், பூடான் மற்றும் நேபாளத்திலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஆயிரம் வீடுகள் வரை சேதமடைந்திருக்கலாம் என கூறப்படும் நிலையில், உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபட சீன அதிபர் ஜி ஜின்பிங் Xi Jinping உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து மீட்பு பணியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்