இஸ்ரேலை கைவிட்ட முக்கிய நாடு.. முறிந்த உறவு.. முடியுமா போர்..? - பின்னால் அடிக்கும் `மர்ம கண்கள்'

x

காசா பகுதியில் இஸ்ரேல் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறியதை அடுத்து சிலி மற்றும் கொலம்பிய அரசாங்கங்கள் இஸ்ரேலுக்கான தங்கள் தூதர்களை ஆலோசனைக்காக திரும்ப அழைத்துள்ளன... போர் நிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுப்ப அழைப்பு விடுத்த சிலி, ஸ்ரேல் சர்வதேச சட்டத்தை மீறுவதாகக் குற்றம் சாட்டியது... கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ, இஸ்ரேல் தாக்குதல்களை பாலஸ்தீன மக்கள் மீதான படுகொலை என கண்டித்தார். மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை செய்து வருவதாகக் கூறி இஸ்ரேலுடனான உறவை பொலிவியா முறித்துக் கொண்டது.


Next Story

மேலும் செய்திகள்