"இது இருந்தால் மட்டும் போதும்" - மிரளவைக்கும் பறக்கும் ஷாப்பிங் கார்ட்

x

தென் கொரியாவின் மொபைல் ரோபோட்டிக்ஸ் ஆய்வகம்

பறக்கும் ஷாப்பிங் கார்ட்கள் உருவாக்கி, வெற்றிகரமாக

சோதனை செய்துள்ளது. பாலட்ரோன் என பெயரிடப்பட்டுள்ள இந்த பறக்கும் கை வண்டிகளில் மால்கள், அங்காடிகளில் வாங்கப்படும் பொருட்களை, எளிதாக படிக்கட்டுகளில் கொண்டு செல்ல முடிகிறது. இதை மெலிதாக பற்றியபடி, சரியான திசையில் செலுத்தி, 3 கிலோ எடை கொண்ட பொருட்களை, எளிதாக நீண்ட தூரத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். இதில் ட்ரோன் தொழில்நுட்பத்துடன், ரோபோ தொழில்நுட்பமும் இணைந்து பயன்படுத்தப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்