56 பேரை காவு வாங்கிய Football..நடுநடுங்க வைத்த சம்பவம் | Kini | Football

x

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியில் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து போட்டியில் வெடித்த வன்முறையில் 56 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் கால்பந்து போட்டி ஒன்றில், நடுவர் சர்ச்சைக்குரிய வகையில் முடிவை அறிவித்ததாகவும், அதனைத் தொடர்ந்து எதிர்த்தரப்பினர் மைதானத்தில் நுழைந்தபோது மோதல் வெடித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த மோதலில் கூட்ட நெரிசலில் சிக்கியும் தாக்குதலுக்கு ஆளாகியும் 56 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக ரசிகர்கள் சுவர் ஏறிக் குதித்த காட்சிகள் வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்