ரயிலில் பெண்ணை தீ வைத்து எரித்து கொன்ற நபர் கைது
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ரயிலில் பெண் ஒருவரை தீ வைத்து கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க் நகரில் சப்வே ரயிலில் பயணித்த பெண் மீது, அவருக்கு அருகே வந்த நபர், திடீரென தீ வைத்துள்ளார். உடல் முழுவதும் தீ பற்றி எரிந்த அந்த பெண், ரயிலில் நின்றபடியே எரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்த பெண் யார் என்று அடையாளம் தெரியவில்லை. தீ வைத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர், 33 வயதான கௌதமாலாவை சேர்ந்த செபஸ்டியன் ஷபெடா கலில் என்றும், சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு வந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story