அண்டை நாட்டில் தவித்த தமிழர்...தாராளமாய் கைகொடுத்த தமிழக அரசு...கடைசி வரை நின்று உதவிய அமைச்சர்

x

தாய்லாந்தில் விபத்துக்குள்ளாகி சிகிச்சையை தொடர இயல முடியாமல் தவித்த தமிழரை, இந்தியா அழைத்து வந்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த தமிழக அரசுக்கு பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தார் நன்றி தெரிவித்துள்ளனர். மயிலாடுதுறையை சேர்ந்த முபாரக் அலி, கடந்த மே மாதம் பணி நிமித்தமாக தாய்லாந்திற்கு சென்ற போது விபத்தில் சிக்கி அங்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். தொடர்ந்து அங்கு அவர் சிகிச்சையை தொடர முடியாத சூழலில், முபாரக் அலி குடும்பத்தாரின் கோரிக்கையை ஏற்று, சுமார் 10 லட்சம் செலவில் அவரை தமிழக அரசு சென்னை அழைத்து வந்தது. நேற்று சென்னை வந்த விமானத்தில் அழைத்து வரப்பட்ட முபாரக் அலியை, அமைச்சர் நாசர் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்